Friday, July 15, 2016

மன்னங்காடு முனியன் உடனுறை கடவுள்களைப் பற்றிய பக்திப் பாடல் வெளியீடு

வாட்டாகுடி கிராமத்தில் பிறந்து வளர்ந்த'இசையரசர்' தஷி அவர்கள் மன்னங்காடு முனியன் மற்றும் உடனுறை கடவுள்களைப் பற்றிய பக்திப் பாடல்களை இசையமைத்து வெளியிட்டிருக்கிறார்.

தஷி பல்வேறு மொழிப் படங்களில் இசையமைத்த அனுபவம் பெற்றவர். 2006ஆம் ஆண்டிற்கான கேரள மாநில சிறந்த பின்னணி இசைக்கான திரைப்பட விருது வழங்கப் பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. 'மன்னை முனீஸ்வரா' பக்திப் பாடல் தொகுப்பை  வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். பாடல் தொகுப்பை வெளியிட்ட 'கிரண் ஸ்டுடியோ'விற்கு நன்றி. 
Share:

இயக்குநர் வீரக்குமார் இயக்கத்தில் தயாராகிறது அஸ்திரம்

இயக்குநர் வீரக்குமார் இயக்கத்தில் தயாராகிறது. அஸ்திரம் என்ற படம். இந்த படத்துக்கு இசை, இசையரசர் தஷி. இது ஒரு மாந்திரிகம், காதல், ஆக்‌ஷன் நிறைந்த படம். இந்த படத்தின் இசை கம்போசிங் சிங்கப்பூரில் நடந்தது. 

Share: